பீர் முகமது பாதுஷா தான் தொழில் அதிபர் என்றும், இரிடியம் தொழிலிலும் ஈடுபட்டு வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், மூன்று மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய தட்சிணாமூர்த்தி ரூ. 92 லட்சம் பணத்தை பீர் முகமது பாதுஷாவிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, தட்சிணாமூர்த்தி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், பீர் முகமது பாதுஷா பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, பீர் முகமது பாதுஷாவை கைது செய்த போலீஸார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.