இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் கலந்து கொண்டு நாவல் மரம், வேப்பமரம், குங்குமரம், மகிழ மரம் உள்ளிட்ட நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை பாதுகாப்பு குறித்தும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தினேஷ் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருங்குழி பேரூராட்சியானது பல்வேறு மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்கி இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாத்ததால் தமிழகத்தில் நம்பர் ஒன் பேரூராட்சி என தமிழ்நாடு முதலமைச்சரின் கரங்களால் பரிசு பெற்றது குறிப்பிடப்பட்டது.