முட்டுக்காடு முதல் நிலை ஊராட்சியில் மகளிர் தின விழா

செங்கல்பட்டு மாவட்டம் படூர் அடுத்த முட்டுக்காடு முதல்நிலை ஊராட்சியில் மூன்றாம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா முட்டுக்காடு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மியூசிக்கல் செயர், கயிறு இழுத்தல், ஸ்பூன் ரேஸ், காலில் கோனியை கட்டிக்கொண்டு குதித்து ஓடுதல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பிரஷர் குக்கர், நான்ஸ்டிக் டவா, மிக்ஸி, ஜூஸ் மிக்ஸர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வழங்கி ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற மற்றும் அனைத்து மகளிர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி மயில்வாகனன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி