செங்கல்பட்டு: சாட்சியம் அளிக்காத இன்ஸ்-க்கு வாரண்ட்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த ஆண்டு, இரண்டு போக்சோ வழக்குகளை, போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடேஸ்வரி பதிவு செய்தார். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில், அனைத்து சாட்சிகளையும் விசாரணை செய்து முடிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடேஸ்வரி சாட்சியம் அளிக்க, நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. பல வாய்தாக்கள் அளிக்கப்பட்டும், அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால், வாரண்ட் பிறப்பித்து, நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி