வண்டலுார் பூங்கா ஊழியர்கள் போராட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 150க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக விலங்கு பராமரிப்பு, சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியும் பணியாளர்களும் தனியார் மயமாவதை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பூங்கா வளாகத்தில் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி