செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கரசங்கால் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 10 வயது பெண் குழந்தை மற்றும் 40 வயது பெண்மணி மீது பாண்டிச்சேரி விரைவு ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டிவனம் ரயில்வே போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.