எருமை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலை விற்று வாழ்வாதாரம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்று எருமை மாடுகள் தெரு வழியாக வந்து கொண்டிருந்தபோது திடீரென தெருவோர மின் கம்பத்தில் இருந்த உயர் மின்னழுத்த ஒயர் அறுந்து எருமை மாடுகள் மீதும் ஒரு நாயின் மீதும் விழுந்துள்ளது. இதனை அடுத்து மின்சாரம் பாய்ந்து எருமை மாடுகள் மற்றும் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளின் மீதும் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் எந்நேரமும் மின்சார விபத்து ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.