மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொதுமக்களின் வாகனங்கள் அதிகப்படியாக செல்கின்றன. இதனால் அச்சரப்பாக்கம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஆமை வேகத்தில் செல்கின்றன. பொதுமக்களின் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கிலோமீட்டர் அளவில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகன போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரிசெய்து வந்தாலும் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை போல் செல்கின்றன.