தொடர்ந்து, 28ம் தேதி வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், அப்பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர், இத்திட்டத்தை கைவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று(அக்.2) காலை 11: 00 மணிக்கு, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் குமரேசன், தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், மேலக்கோட்டையூர் ஊராட்சி தலைவர் கவுதமி உள்ளிட்டோர் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடந்தது.