தண்டலம் முத்துமாரியம்மன் கோவில் சாலையில், எதிர் திசையில் வந்த இருவர் பைக்கை இடிப்பது போல் ஓட்டிச் சென்றதால், ஒரு பெண் வாக்குவாதம் செய்தார். அவர் அவர்களை புகைப்படம் எடுக்க முயன்றபோது, இளைஞர் ஒருவர் அவரது முகத்தில் தாக்கிவிட்டு தப்பினார். காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து குன்றத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.