இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பாக புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் கட்ட, கடந்தாண்டு செப்டம்பரில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, 5,661 சதுரஅடி பரப்பளவில், 2.24 கோடி ரூபாய் மதிப்பில், அலுவலகம், ஓய்வு அறை, ஆலோசனை கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நிலம் சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. சில நாட்களில் பூமி பூஜை போடப்பட்டு, கட்டுமானத்திற்கான பணிகள் துவங்கப்படும் என, தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி