செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே கொளத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இரவு பகல் பாராமல் அதிவேகத்திலும் அஜாக்கிரதையாகவும் இயக்கப்படுவதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நேரங்களில் வாகனங்களை இயக்கக் கூடாது என கல்குவாரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பயனளிக்காததால், கிராம மக்கள் ஒன்று கூடி சித்தாமூர் பெருவெளி சாலையில் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.