தி. மு. க. , வின் பொய்யான வாக்குறுதியை மக்கள் ஏற்க மாட்டார்கள்

மதுராந்தகம் அருகே மாமுண்டூரில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலரும், திரைப்பட நடிகருமான ரவி மரியான், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், பொய்யான வாக்குறுதிகளையும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என வாக்காளர்களிடையே எடுத்து கூறி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஏசி, மிக்ஸி, மின்விசிறி இவைகளை 8,000 ரூபாய் கூப்பன் என்ற பெயரில் வாங்கிக் கொள்ளலாம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்த 8,000 ரூபாயில் எந்த பொருட்களையும் வாங்க முடியாது என பொதுமக்களுக்கு தெரியும், இதுவே பொய்யான வாக்குறுதி என அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி