கனரக வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை யில், நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில்சிக்குவதை தவிர்க்கும் வகையில், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் ஒட்டியுள்ள கருப்படிதட்டடை ஊராட்சி குட்டைக்கரை பகுதியில், நடைபாதையை ஆக்கிரமித்து கட்டுமானபொருட்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளன.
இதனால், நடைபாதையில் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, கருப்படிதட்டடை குட்டைக்கரை பகுதியில், நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.