இந்தாண்டு கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
ஏழாவது நாளான இன்று இளங்கிளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் ஆட்சேஸ்வரர் திருக்கோவில் தலைமை குருக்கள் சங்கர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இந்த நவராத்திரி கொலுவின் ஏழாம் நாள் விழா அச்சரப்பாக்கம் பேரூராட்சி கவுன்சிலர் சுரேஷ் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதன் பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.