செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூரில் இருந்து கிராம மக்களிடம் வாங்கப்பட்ட சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை டாட்டா ஏஸ் வாகனத்தில் கடத்திச் சென்றபோது சமூக ஆர்வலர்களால் பிடிக்கப்பட்டு சித்தாமூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்திரேயா (60) கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட அரிசி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.