பின் லட்சுமி ஹோமம், கோ பூஜை, நவகிரக யந்திர ஸ்தாபனம், வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. அதன் பின், மூன்றாம் கால பூஜை ஆரம்பித்து, யந்திர உபச்சாரம், தேவார திருமுறைகள் விண்ணப்பம், மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மங்கள இசை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம், நாடி சந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பருஷாஹுதி, நாமகரணம், தம்பதி சங்கல்பம், கலச புறப்பாடு நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு மேல் 10:50 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் வேம்புலி அம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரம் நகரம்
தவெக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்