இச்சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது எதிரி சிறுமியை பாலியல் தாக்குதல் செய்யும் நோக்கத்துடன் சிறுமியின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததால் சிறுமி மயக்கமடைந்து சுயநினைவிழந்த நிலையில் எதிரி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில், அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் லட்சுமி ஆஜராகி வழக்கின் சாட்சிகளை விசாரணை மேற்கொண்டார்.