செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த பச்சம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குப்பன் (35), வெளிக்காடு பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அணைக்கட்டு போலீசார் குப்பன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.