பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய ‘எம்ஜிஆர் அதிமுக’ கட்சி, 2026 தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார், தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக விஜய்யை ஆதரிப்பதாக விளக்கமளித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பண்ருட்டி ராமச்சந்திரன் விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார்.