சென்னையில் இன்று (பிப்., 07) அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், வடசென்னையின் மூத்த அரசியல் தலைவருமான வி.எஸ்.பாபு, தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து தனது கட்சியில் இணைந்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலர் தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.