உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் தவெக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ரஞ்சித் குமார் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளரிடம் அமைச்சர் தென்னரசு பேட்டி அளித்த நிலையில், "தமிழ்நாடே தளபதி நாடுதான்" என்று தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையம் குறித்த கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் கை எடுத்து கும்பிட்டு விட்டு சென்றார்.