செங்கல்பட்டு மாவட்டம், கானத்தூர் ரெட்டிக் குப்பம் மீனவ கிராமத்தில் கடற்கரை முழுவதும் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடல் அரிப்பை தடுக்க நீண்ட கால கோரிக்கையான தூண்டில் வளைவு அமைப்பு தர அரசு துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மீனவ கிராம கடற்கரை முழுவதும் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்களின் படகுகள், வலைகள், எஞ்சின்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பாதுகாப்பாக வைக்க இடமில்லாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அரசு அறிவித்தபடி ரூபாய் 19 கோடியில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலையை மறித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
மீனவ கிராம மக்களுக்கு ஆதரவாக அப்பகுதி வணிகர்களும் கடை அடைத்து ஆதரவை அளித்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவ கிராம மக்கள் அதிகாரிகள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம், சிறை செல்லவும் தயங்கமாட்டோம் என்றனர்.