செங்கல்பட்டு: காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

அச்சரப்பாக்கம் அருகே ஆனந்தமங்கலம் பகுதியில், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சரண் என்பவர் தனது மனைவி மதுமிதாவை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில், மனைவி ஆண் நண்பருடன் தொடர்ந்து போனில் பேசி வந்ததாகவும், பலமுறை கண்டித்தும் அவர் பேசுவதை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த கணவன் இந்தக் கொலையைச் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சரணை ஓரத்தி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி