செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜூன் 14) காலை முதலிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் இரவு கரு மேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் கூடிய கனமழையானது அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், ஒரத்தி கடமலைப்புத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அச்சிறுப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.