படாளம்: தேசிய நெடுஞ்சாலையில்.. அரசு பேருந்து விபத்து

மதுராந்தகம் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து முன் சக்கர டயர் வெடித்து சாலையின் நடுவே பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 43 பேரில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒரு மூதாட்டி மட்டும் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளார். 

இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சாலை விபத்தால் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி