இதனால் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணமின்றி புராதன சின்னங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக, மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணி நபர் ஒருவருக்கு 40 ரூபாய் கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இலவச அனுமதியை முன்னிட்டு இன்று (சனி) ஒரு நாள் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு ஆகிய பகுதிகளில் உள்ள நுழைவு கட்டண மையம் மூடப்பட்டிருக்கும் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்