செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் போராட்டம்

செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்த நரிக்குறவர்கள் தங்களுக்கு தங்கள் வசிக்கும் பகுதியிலே பட்டா வழங்க கோரிக்கை 

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகருணை கிராமத்தில் நரிக்குறவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பல பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும் சிறுகருணை கிராமத்தில் அவர்கள் வாழ்வதற்கு இடம் ஒதுக்கி தருகிறோம் அங்கு சென்று வாழுங்கள் என்றும் அரசு சார்ந்த அதிகாரிகள் கூறினர். எங்களை அங்கே குடியமர்த்திய பிறகு நாங்கள் எங்களுக்கு தேவையான மின்சாரம் தண்ணீர் போன்ற வசதிகளை நாங்களே ஏற்படுத்திக் கொண்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம். அப்படி வாழ்ந்து வந்த எங்களை உங்களுக்கு அங்கு பட்டா வழங்க முடியாது அந்த இடம் மேய்க்கால் புறம்போக்கு என கோரி தற்போழுது அகிலி கிராமத்திற்கு செல்லுங்கள் சிறுகருணை கிராமத்தை விட்டு என இப்போது வருவாய் துறையினர் கூறுகின்றனர். 

எங்களுக்கு ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை அனைத்தையும் வழங்கி எங்களை ஓட்டுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். தங்களுக்கு தங்கள் வாழும் பகுதியிலே பட்டா வழங்க வேண்டும் என கூறி செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி