செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த கடமலைபுத்தூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் என். ரங்கராஜன், மருத்துவத்துறை இணை இயக்குனர் மலர்விழி திடீரென ஆய்வு செய்தபோது தப்பி ஓடினார். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான போலி மருத்துவர் தேடப்பட்டு வருகிறார். இவர் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் உள்ளார்.