அதனைக் காண கடப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கோடை வெயில் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் இன்று இடைக்கழிநாடு பேரூர் திமுக சார்பில் பேரூராட்சி மன்றஉறுப்பினர்கள் அருண்பாபு, கலாசெல்வம் ஆகியோர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
அதனை பேரூராட்சி மன்றத் தலைவர் சம்யுக்தா அய்யனார் அவர்கள் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பக்தர்களுக்கு நீர், மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் மன்றஉறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.