இதில், அருங்காட்சியக பொருட்களை எவ்வாறு கையாள்வது, வரலாற்று துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என, பல்வேறு பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு நாளான நேற்று, (அக் 6) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் மாணவ - மாணவியருக்கு நேரடி களபயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பல்லவர் கால கட்டட கலைகள், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், மாணவ - -மாணவியருக்கு விளக்கம் அளித்தார்.
அதை தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த மாணவ - மாணவியருக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. அருங்காட்சியக நண்பர்கள் அமைப்பை சார்ந்த கவிஞர் செல்வராசன் மாணவர்களுக்கான களப் பயணயத்திற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.