செங்கை: வண்டி சீட்டின் லாக்கை உடைத்து பணம் கொள்ளை.. சிசிடிவி

அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் மேனகா, நகை மீட்பதற்காக இந்தியன் வங்கிக்குச் சென்றார். 2 லட்சத்தை வங்கியில் கட்டிவிட்டு, மீதமுள்ள ஒன்றரை லட்சத்தை டூ வீலரின் சீட்டுக்கடியில் வைத்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வண்டியின் சீட்டு லாக்கை உடைத்து ஒன்றரை லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பணம் திருடு போனதை அறிந்த மேனகா, அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி