திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த காரில் கணவன், மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் பயணம் செய்தனர். கார் மதுராந்தகம் புறவழி சாலையில் வரும் போது காரின் டயர் வெடித்து அது தனது முழு கட்டுப்பாட்டை இழந்து மறுமார்க்கமான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் பயணம் செய்த கணவன், மனைவி, குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இவர்கள் அனைவரும் சென்னை வில்லிவாக்கம் பகுதி சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது. உடனடியாக மதுராந்தகம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.