செய்யூர்: ஸ்கூட்டரில் கார் மோதி பேக்கரி ஊழியர் பலி

செய்யூர் அடுத்த கடுகுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து (30), அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார். இரவு 11 மணியளவில், வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து கடுகுப்பட்டு கிராமத்திற்கு திரும்பும் வழியில், எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில் அங்கமுத்து தூக்கி வீசப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி