இந்நிலையில் இந்தப் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கஸ்தூரிதீனதயாளன் அவர்கள் கலந்து கொண்டார். பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி பின்னர் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் இருளர்கள் என மக்களின் பிள்ளைகள் மட்டுமே படிப்பது குறிப்பிடத்தக்கது.