சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் விபத்தில் சிக்கிய கார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அகற்றப்படாமல் கிடந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 5 மணி நேரத்திற்கு பிறகு பெருங்களத்தூர் - தாம்பரம் சாலையில் போக்குவரத்து சீரானது.