செங்கல்பட்டு மாவட்டம் புளிப்பாக்கம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக பல்சர் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பார்த விதமாக இருசக்கர வாகனத்தில் இன்ஜின் பகுதி தீ பற்றி எரியத் தொடங்கியது.
பின்பு இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய வாலிபர் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார் பின்பு தீ மல மல வென எரிந்து இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் கருகியது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலைவியது.
பின்பு தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தில் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.