அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஆட்டோ மீது மோதி விபத்து

மேல்மருவத்தூரில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஆட்டோ மீது மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் என்ற இடத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தில் இருந்து நோயாளிகள் யாருமில்லாமல் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி நிலை தடுமாறி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.

இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனை அடுத்து சம்பவம் அறிந்து அங்கு வந்த மேல்மருவத்தூர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி