அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முள்ளி என்ற கிராமத்தில் லோகநாதன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் நெற்பயிற் பயிர் வைத்திருந்தார். தற்பொழுது நெல் முற்றிய நிலையில் இன்று வயல்வெளியில் அறுவடை இயந்திரத்தை வைத்து அறுவடை செய்து கொண்டு வந்திருந்த பொழுது திடீரென மின்சார கம்பியில் அறுவடை இயந்திரம் உரசிதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக இதுகுறித்து மதுராந்தகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.