பெரியகாட்டுப்பாக்கம் பகுதியில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

திருக்கழுக்குன்றம் அடுத்த பெரியகாட்டுப்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து 30 சவரன் தங்க நகை கொள்ளை திருக்கழுக்குன்றம் போலீசார் டைகர் மோப்ப நாயுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பெரியகாட்டுப்பாக்கம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ரேவதி பத்மநாபன் இவர் நேற்று சென்னைக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வந்துள்ளார் முகப்பு வாசலில் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பீரோவை பார்த்துள்ளார் அதில் வைத்திருந்த 30 சவரன் நகையும் அலமாரியில் வைத்திருந்த 9 கிலோ வெள்ளி பொருட்களும் காணாமல் போனது தெரிய வந்தது உடனடியாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தற்போது டைகர் (மோப்பனாய்) உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி