கிரேன் ரோப் அறுந்து விழுந்ததில் பணியாளர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வட்டம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தயாளன் (55) என்பவர் பிட்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பாய்லர் டேங்க்கை லாரியில் ஏற்றும் பணியின்போது, எதிர்பாராதவிதமாக கிரேன் ரோப் அறுந்து டேங்க் அவர் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே தயாளன் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி