இந்நிலையில், ஓரிக்கை மிலிட்டரி சாலை, பேராசிரியர் நகர் -- 1, நாகம்மையார் தெரு அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக குடிநீர் வீணாகி, மழைநீர் வடிகால் வாயிலாக வெளியேறி வருகிறது.
இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓரிக்கை பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.