காஞ்சிபுரம் கோளிவாக்கம் திமுக கட்சி அலுவலகம் அருகில், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஜூன். 3) காலை புதிதாக கொடிமரம் நடும் பணி நடைபெற்றது. அப்போது கொடி கம்பம் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் பணியில் ஈடுபட்டவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ராஜேந்திரன் (56) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் காளி, குப்பன் ஆகிய இருவர் காயமடைந்தனர். தாலுகா போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.