தகவல் அறிந்து வந்த பொன்னேரிக்கரை போலீசார் ஆய்வு செய்தனர். அதே பேருந்தில் பயணித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பூமி (25), சுமித்ரா (35) ஆகிய இருவரும் தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது. இருவரையும் பொன்னேரிக்கரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், காஞ்சிபுரம் பல்லவர்மேடைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (46). இவர், நேற்று (ஜனவரி 1) வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். மாலை வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரிந்தது. சிவகாஞ்சி போலீசார் விசாரணையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (24) என்பவர் திருடியது தெரிய வந்தது. ரஞ்சித்குமாரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.