காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அண்ணா காவல் அரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.