செங்கல்பட்டில் தர்பூசணி பழத்தை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட தர்பூசணி பயிர்கள் விவசாய நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் தவறான தகவலால் விலை நிலங்களில் தர்பூசணிகள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை. செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், இலத்தூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக கொடிவகை பயிர்கள் பயிர் செய்வது வழக்கம். இந்த நிலையில் இந்த பகுதிகளில் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தர்பூசணி பயிர் பயிரிடப்பட்டுள்ளனர்.

 கடந்த சில தினங்களாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி, இந்த தர்பூசணி பழங்களை வியாபாரிகள் ரசாயன பொருள் கொண்டு பழுக்க வைப்பதாக தெரிவித்தனர். இதனால் வியாபாரிகள் தர்பூசணி பயிர்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இலத்தூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட தர்பூசணி பயிர்கள் விலை நிலங்களிலே அழுகும் நிலையானது ஏற்பட்டுள்ளது. 

எனவே இதுபோன்ற தவறான பொய் புகார்களை தெரிவிக்கும் அரசு அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தர்பூசணி விவசாய சங்க விவசாயிகள் தமிழக அரசுக்கு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி