விழாவையொட்டி முப்பெரும் தேவியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனைகள் நடைபெற்றன. உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் நடைபெற்றன. பின், தேவியர் மூவரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். கேளம்பாக்கம், தாழம்பூர், நாவலூர், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் தேர் வலம் வந்த பின், தேரடியை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் மற்றும் அறங்காவலர் கிருஷ்ணன் குட்டி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை