குன்றத்தூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஆசிரியர் பலி

சென்னை ஆவடி அடுத்த அரிக்கமேடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சசிகலா, அவரது மகன் லோகேஷ், பொன்னேரிகுப்பம் அரசு பள்ளி ஆசிரியர் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி மகள்கள் மதுழினி, கழலி ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு காரில் வீடு திரும்பினர். நேற்று (மே 24) காலை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆசிரியர் பிரபாகரன் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி