தாம்பரம்: பேருந்தில் இருந்து 9 சவரன் நகைகள் திருட்டு

தாம்பரம் அடுத்த படப்பை காவனூர் அருகே உள்ள திருத்தவேலி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (65) நேற்று முன்தினம் உறவினர்களுடன் திருத்தணிக்கு சென்றுவிட்டு அரசு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். படப்பை அருகே வந்தபோது, தனது பையில் வைத்திருந்த 9 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். இது குறித்து படப்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி