தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி. கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் (தனி), உத்திரமேரூர் மற்றும் ஆலந்தூர் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கி. சண்முகம், காவல் துறை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி